நிஷ்கிரமானம் என்பது புதிதாகப் பிறந்த குழந்தையை முதன்முறையாக வீட்டிற்கு வெளியே அழைத்து செல்லும் புனிதமான சடங்காகும். குழந்தை 3 to 4 மாத வயதில், நல்ல நாளை பார்த்து, குடும்பத்தினர் மற்றும் மூத்தோரின் ஆசீர்வாதத்துடன் செய்யப்படும்.
இந்த சடங்கு, குழந்தைக்கு வெளிச்சம், காற்று, இயற்கை, மற்றும் உலகத்தை அறிமுகப்படுத்தும் அழகான தொடக்கமாகும். குழந்தையின் நலன், ஆரோக்கியம், வளர்ச்சி, மற்றும் நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இது குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகமான தருணமாகக் கருதப்படுகிறது.